Breaking News

இ தொ கா பொதுச் செயலாளராக ஜீவன் ஏகமனதாக தெரிவு !

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் இன்று காலை நடந்த கட்சியின் பொதுச் சபை கூட்டத்தில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அதேசமயம் இதுவரை செயலாளராக பணிபுரிந்த அனுஷா சிவராஜா கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தேர்தல் முடிந்த பின்னர் தலைவர் பதவி தெரிவு இடம்பெறுமென சொல்லப்பட்டது.