இலங்கை

இ.தொ.கா பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக பொகவந்தலாவ , லெட்சுமி தோட்ட மேல்பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்

லெட்சுமி மேல்பிரிவு தோட்டத்தில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது

பிரதேசத்திற்கு வரும் அபிவிருத்தி திட்டங்களை தடுக்கும் வகையிலும் மக்களிடத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் போலி பிரசாரங்களை முன்னெடுத்துவருவதாக நோர்வூட் பிரதேசசபையின் இ.தொ.கா வின் கெர்கசோல்ட் வட்டார உறுப்பினர் சரோஜாதேவிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டோர் தெரிவித்தனர்.

மேற்படி விடயம் தொடர்பில் கவனமெடுப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் உறுதியளித்ததன் பின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

-நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் –