விளையாட்டு

இஸ் சோதிக்கு இரண்டு புதிய பதவிகள்நியூசிலாந்து  கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் இஸ் சோதி, இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இரண்டு புதிய பதவிகளை வகிக்கவுள்ளார்.

சுழற் பந்துவீச்சு ஆலோசகர் மற்றும் செயற்பாட்டு அதிகாரி என இரண்டு பதவிகளில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இடதுகை சுழற் பந்துவீச்சாளரான இஸ் சோதி, ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சாய்ராஜ் பஹதுலே மற்றும் தலைமை செயற்பாட்டு நிர்வாகி ஜெக் லஸ் மெக்ரம் ஆகியோருடன் இணைந்து செயற்படவுள்ளார்.

இஸ் சோதி நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் நிலையில், இந்தியன் ப்றிமியர் லீக் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

இந்நிலையிலேயே அவர் தற்போது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோகர் மற்றும் செயற்பாட்டு அதிகாரியாக செயற்படவுள்ளார்.