Breaking News

இவ்வருட இறுதிவரை எரிபொருள் விலைகள் மாறாது – அமைச்சர் அமரவீர

உலக சந்தையில் எரிபொருளின் விலை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கப்பட்டாலும், இலங்கையில் இந்த ஆண்டின் இறுதி வரை எரிபொருளின் விலை அதிகரிக்கப்படாது என போக்குவரத்து முகாமைத்துவம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற எரிபொருளின் விலையை அவ்வாறே இந்த ஆண்டின் இறுதி வரை கொண்டு செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அதன் நன்மையை மக்களுக்கு பெற்றுகொடுக்க அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எனினும், டிசல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினாலும், பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 35 ரூபாவினாலும் நட்டம் ஏற்படும் வகையிலேயே பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்களுக்கு எரிபொருளை விநியோகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
.