சினிமா

இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு 2ஆவது நாளாகவும் வந்து சென்ற ரஜினி

சென்னை தியாகராய நகரிலுள்ள இசைஞானி இளையராஜா சொந்தமாக அமைத்துள்ள ஹைடெக் மியூசிக் ஸ்டுடியோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து இரண்டாவது நாளாக வந்து சென்றுள்ளார்.

நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டுடியோவை பார்வையிட்ட ரஜினிகாந்த், பின்னணி இசைப் பதிவு பணிகள், பாடல் ரெக்கார்டிங் உள்ளிட்டவற்றையும் பார்த்து இரசித்து இசைஞானியை பாராட்டியுள்ளார்.

திங்கட்கிழமை வந்து சென்றதோடு, மீண்டும், 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவிற்கு வந்து சென்றுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் இசைப்பணியும் அங்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் ஸ்டூடியோவுக்கு வருகை தந்த ரஜினி இளையராஜாவுடன் நீண்ட நேரம் உரையாடினார்.

அப்போது, கோவிலுக்கு வந்து சென்ற உணர்வு ஏற்படுவதாக இசைஞானியிடம் ரஜினி  கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.