உலகம்

இளையராஜாவின் பாடல்களை பாட நீதிமன்றம் தடை

இளையராஜாவின் பாடல்கள் விடயத்தில் சென்னை மேல்நீதிமன்றம் தாம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
தமது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு முன்னதாக, தமது அனுமதியைப் பெற வேண்டும் என்று இளையராஜா தெரிவித்து வருகிறார்.
இதுதொடர்பான வழக்கில் அவரது பாடல்களை அனுமதி இன்றி பாட முடியாது என்று ஏற்கனவே மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேன்முறையீடு மீதான விசாரணை நேற்று இடம்பெற்றப் போது, மீண்டும் அந்த தீர்ப்பை உறுதிப்படுத்தியது.