விளையாட்டு

இலங்கை, ஸ்கொட்லாந்துடன் இன்று பலப்பரீட்சை

இலங்கை, ஸ்கொட்லாந்துடன் இன்று பலப்பரீட்சை

உலக கிண்ண கிரிக்கட் தொடர் இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இன்று இலங்கை அணி ஸ்கொட்லாந்துடனான ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.

இரண்டு ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் இன்றைய முதலாவது போட்டி எடின்பேர்கில் நடைபெறும்.

இந்த போட்டியில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய மலிங்க இன்னும் ஸ்கொட்லாந்துக்கு செல்லவில்லை.

இந்தநிலையில் இலங்கை அணி ஏனைய பந்துவீச்சாளர்களைக் ஈடுபடுத்தி, உலகக் கிண்ண அணிக்கான பந்துவீச்சாளர் தெரிவை மேற்கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது.