இலங்கை

இலங்கை வரும் மாலைதீவின் ஜனாதிபதியும் அமைச்சரவை குழுவும்

மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் சோலி தலைமையிலான அமைச்சரவைக் குழு ஒன்று அடுத்தவார இறுதியில் இலங்கை வரவுள்ளது.

பிரதமர் ரணிலின் அழைப்பில் அந்த குழு இலங்கை வருவதாக பிரதமர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பிரதமர் மோடி மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் விஜயம் செய்து திரும்பிய சில தினங்களில் இந்த விஜயம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.