விளையாட்டு

இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 16வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதுகின்றன.

பங்களாதேஸ் அணி இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் வெற்றி பெற்றதுடன் , பாகிஸ்தான் உடனான லீக் போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்ட நிலையில் ஒரு புள்ளியை பெற்றுள்ளது.

பயிற்சியின் போது காயமடைந்த இலங்கை வீரர் நுவான் பிரதீப்புக்கு பதிலாக இன்று ஜீவன் மெண்டிஸ் இணைத்துக் கொள்ளப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஸ் அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.