இலங்கை

“இலங்கை நீதித்துறையில் தலையிட்ட அமெரிக்கா” – உதய கம்மன்பில பரபரப்பு குற்றச்சாட்டு !

இலங்கை நீதிபதிமாருக்கு செயலமர்வு ஒன்றை நடத்திய அமெரிக்கா , தீர்ப்புக்கள் எப்படி வழங்கப்பட வேண்டுமென வகுப்பு நடத்தியிருப்பதாக இன்று பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் உதய கம்மன்பில எம் பி .

அவர் மேலும் கூறியதாவது,

அமெரிக்க சதியின் காரணமாகவா இந்த தாக்குதல் இடம்பெறுள்ளது என்று கேட்க விரும்புகிறேன்.

ஏப்ரல் 8 ஆம் திகதியில் இருந்து 12 ஆம் திகதி வரை அமெரிக்காவில் செயலமர்வொன்று நடந்தது. அமெரிக்க தூதரகத்தின் பெற்ரிக் என்ற அரசியல் அதிகாரி இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

நீதிபதிகளான புவனேக்க அலுவிஹாரே ,பிரியந்த ஜயவர்தன ,விஜித் மலல்கொட ,நவீத் நவாஸ்,ஜனக்க டி சில்வா , பந்துல கருணாரத்ன ,சம்பா ராஜரத்ன ,சம்பத் விஜேரத்ன , சம்பத் அபேகோன் ஆகியோர் இதற்கு சென்றனர்.

காமினி செனரத் வழக்கு கோட்டபாய மீதான வழக்கு குறித்து கேட்ட பெற்ரிக் என்ற அதிகாரி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக தீர்ப்பை வழங்குமாறு கேட்டுள்ளார். இதுதான் அமெரிக்கா இலங்கை நீதித்துறையில் செய்யும் தலையீடு . அமெரிக்க நீதியமைச்சும் , எவ் பி ஐயும் இதனை ஒழுங்கு செய்திருந்தன. இது நீதித்துறையில் நேரடித் தலையீடு .

நாட்டுப்பற்றுள்ள நீதிபதிகள் சிலர் இதனால் அதிர்ச்சியாகியுள்ளனர்.அதில் ஒருவர் இந்த உரையாடலை ஒலிப்பதிவு செய்தார். அது என்னிடம் உள்ளது.அதனை நான் சபையில் சமர்ப்பிக்க மாட்டேன்.

பெற்ரிக் இராஜதந்திர சிறப்புரிமைகளை கொண்டிராவிட்டால் அவர் தூக்குத் தண்டனைக்கு தகுதியாகியிருப்பார்.

என்றார் கம்மன்பில