விளையாட்டு

இலங்கை – நியுசிலாந்து உலகக் கிண்ண போட்டியில் லதம் விளையாடுவாரா?

நியுசிலாந்து அணியின் விக்கட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான தொம் லதம், உலகக்கிண்ண தொடரின் முதலாவது போட்டியில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் வெளியாக்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் 1ம் திகதி இலங்கைக்கு எதிராக நியுசிலாந்து அணி தமது முதலாவது உலகக்கிண்ண போட்டியில் விளையாடவுள்ளது.
தொம் லதம் ப்ரிஸ்பேனில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி போட்டியின் போது விரல் பகுதியில் காயப்படுத்திக் கொண்டார்.
இந்தநிலையில் அவர் முதலாவது போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.