இலங்கை

இலங்கை தொடர்பில் ஐ.நாவுக்கு விசேட இரகசிய அறிக்கை !

 

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேட இரகசிய அறிக்கை ஒன்றை  சித்திரவதைக்கெதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட உபகுழு சமர்ப்பிக்கவுள்ளது

கடந்த 2 ஆம் திகதியில் இருந்து 12 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பொலிஸ் நிலையங்கள் ,சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு முகாம்கள் உட்பட்ட பல இடங்களை பார்வையிட்ட இந்தக் குழு அரச அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களையும் சந்தித்திருந்தது.

இலங்கையில் அனைத்து தரவுகளையும் தேட முடிந்ததாக மேற்படி 4 பேர் கொண்ட குழுவுக்கு தலைமை தாங்கிய விக்டர் சஹரியா தெரிவித்துள்ளார்.

இந்தக் குழு இலங்கையின் நிலைமை குறித்து விரிவான இரகசிய அறிக்கையை ஐ.நாவுக்கு சமர்ப்பிக்கவுள்ளது