இலங்கை

இலங்கை தாக்குதல்களுக்கு கவலை தெரிவித்தார் தென்னாபிரிக்க ஜனாதிபதி ரமபோஷா !

 

வெளிநாட்டு விஜயம் ஒன்றின் போது இடைநடுவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடைத்தங்கலை மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவை பிரதமர் ரணில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்திய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்தல் மற்றும் இலங்கையில் புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது .

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தாக்குதல் குறித்து தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இங்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.