விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் விருதுகள்;  மாலிங்கவுக்கு இரண்டு, சமரிக்கு மூன்று

இலங்கை கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளை  கௌரவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும், “இலங்கை கிரிக்கெட் விருது” வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்கில் திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது வழங்கும் விழாவில் மொத்தமாக உள்ள+ர் போட்டிகள், கழக மட்ட விருதுகள், சர்வதேச விருதுகள், ஊடகவிலாளர்களுக்கான விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் என மொத்தமாக 48 விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், சர்வதேச வீரர்களுக்கான விருதுகளில் இலங்கை அணியின் முன்னணி அனுபவ வீரர்களான லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோர் அதிகபட்சமாக தலா இவ்விரண்டு விருதுகளை தட்டிச்சென்றனர்.

அத்துடன்இ மகளிருக்கான சர்வதேச விருதுகளில் சமரி அதபத்து 3 விருதுகளை வென்றதுடன், சஷிகலா சிறிவர்தன 2 விருதுகளை வெற்றிகொண்டார்.

எனினும், இந்த ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்படவில்லை.  மேலும் பெண்களுக்கான சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான விருதுகளும் வழங்கப்படவில்லை.

விருதுகள் –  ஆடவர் சர்வதேச விருதுகள்

சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் –  திமுத் கருணாரத்ன
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்  – டில்ருவான் பெரேரா
சிறந்த சகலதுறை வீரர் (டெஸ்ட்) – தனஞ்ஜய டி சில்வா

சிறந்த  ஒருநாள் துடுப்பாட்ட வீரர் – குசல் ஜனித் பெரேரா
சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர் – லசித் மாலிங்க
சிறந்த சகலதுறை வீரர் (ஒருநாள்) – திசர பெரேரா

சிறந்த இருபதுக்கு-20 துடுப்பாட்ட வீரர்  – திசர பெரேரா
சிறந்த இருபதுக்கு-20 பந்துவீச்சாளர் – லசித் மாலிங்க
சிறந்த இருபதுக்கு-20 சகலதுறை வீரர்   – இசுரு உதான

விருதுகள் – மகளிர் சர்வதேச விருதுகள்

சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனை  – சமரி அதபத்து
சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர் – ஓசதி ரணசிங்க
சிறந்த ஒருநாள் சகலதுறை வீராங்கனை – சமரி அதபத்து

சிறந்த இருபதுக்கு-20 துடுப்பாட்ட வீராங்கனை – சமரி அதபத்து
சிறந்த இருபதுக்கு-20 பந்துவீச்சாளர் – சஷிகலா சிறிவர்தன
சிறந்த இருபதுக்கு-20 சகலதுறை வீராங்கனை  – சஷிகலா சிறிவர்தன

சிறந்த சர்வதேச நடுவர் – குமார் தர்மசேன