Breaking News

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு !

 

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 200 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

அந்த வழியே வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்தனர்.

கடல் எல்லையை கடந்து வந்து மீன்பிடித்தனர் என கூறி படகுகளில் சென்ற 2 ஆயிரம் மீனவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

இதனிடையே இலங்கை கடற்படை தாக்கி தமது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக தமிழக மீன்வர்கள் தெரிவித்துள்ளனர்.