இலங்கை

இலங்கை இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது…

இலங்கை இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது…

அதி நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத் தலைமையகம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (08) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

புதிய இராணுவ தலைமையக வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதியை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வரவேற்றார்.

மரியாதை வேட்டுக்களுடனும் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடனும் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து இராணுவ தலைமையகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

அதிகாரிகளுக்கான சேவை பதக்கங்களும் சிவில் பணிக்குழாமினருக்கான சேவை பதக்கங்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிக்கு இங்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.