இலங்கை-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மத்தியஸ்தராகும் ரஞ்சன் மடுகல்ல
வரலாற்றில் முதன்முறையாக இலங்கை கிரிக்கட் அணி பங்குபற்றும் டெஸ்ட் போட்டியொன்றில் மத்தியஸ்தராக கடமையாற்றுவதற்கு ரஞ்சன் மடுகல்லவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இ்ங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலேயே அவர் இவ்வாறு கடமையாற்றவுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட தொடரில் போட்டி மத்தியஸ்தர் தொடரை நடத்தும் நாடுகளைச் சார்ந்தவராக இருக்க முடியாது என்பதே இதுவரைக் காலமும் பின்பற்றப்பட்டு வந்த விதிமுறையாகும். ஆனால் தற்போது உலகம் முழுவதுமாக கொவிட் வைரஸ் பரவல் காரணமாக தற்போது இந்த விதிமுறையை மாற்றுவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.
ஐசிசியின் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றிவரும் ரஞ்சன் மடுகல்ல, சர்வதேச ரீதியில் அதிகளவான டெஸ்ட் போட்டிகளுக்கு மத்தியஸ்தராக செயற்பட்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
1993ஆம் ஆண்டு போட்டி மத்தியஸ்தகராக கடமையை ஆரம்பித்த ரஞ்சன் மடுகல்ல இதுவரையில் 193 டெஸ்ட் போட்டிகளில் மத்தியஸ்தகராக செயற்பட்டுள்ளார்.
உலகில் 150 டெஸ்ட் போட்களுக்கு மத்தியஸ்தகராக கடமையாற்றிய ஒரே நபர் ரஞ்சன் மடுகல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2012 மற்றும் 2018ஆம் வருடங்களுக்காக ஐசிசியின் சிறந்த நடுவராக தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் குமார் தர்மசேனவும் இந்த தொடரில் நடுவராக செயற்படவுள்ளமை விசேட அம்சமாகும்.