விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து இன்று மோதல்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை.

எனினும் இலங்கை அணியில் துடுப்பாட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது.

குறிப்பாக லஹிரு திரிமன்னேவுக்கு பதிலாக அவிஸ்க பெர்ணாண்டோ மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லசித் மலிங்க மீண்டும் இலங்கை வந்திருந்த நிலையில் இங்கிலாந்து சென்றடைந்தார்.

அவர் இன்றைய போட்டியில் விளையாடுவார் என கூறப்படுகிறது.