விளையாட்டு

இலங்கை அணியுடன் இணைகிறார் லசித் மலிங்க

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இன்றையதினம் இங்கிலாந்தில் இலங்கை கிரிக்கட் அணியுடன் இணைந்துக் கொள்ளவுள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றிருந்த லசித் மலிங்க, இங்கிலாந்துக்கு பயணித்த இலங்கை குழாமுடன் இணைந்து பயணிக்கவில்லை.
இலங்கையில் தங்கி இருந்த அவர் இன்று இங்கிலாந்து சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப்போட்டியில் மலிங்க விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.