விளையாட்டு

இலங்கை அணிக்கு அநீதி – அசந்த டீ மெல் குற்றச்சாட்டு.

 

உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கட் அணி அநீதியான முறையில் நடத்தப்படுவதாக, அதன் முகாமையாளர் அசந்த டி மெல் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து தாம் ஐ.சி.சியில் முறையிட்டிருப்பதாகவும் அவர் இங்கிலாந்தின் ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

இலங்கை அணி விளையாடிய போட்டிகளுக்கான ஆடுகளங்கள் அனைத்தும் பந்துவீச்சுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கார்டிஃபில் இலங்கை அணி பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு போதிய வசதி வழங்கப்படவில்லை.

அத்துடன் இலங்கை கிரிக்கட் அணிக்கான தங்குமிட வசதியும் சிறப்பாக இல்லை என்று அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஐ.சி.சி முற்றாக நிராகரித்துள்ளது.

இலங்கை அணி இதுவரையில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே களமிறங்கி விளையாடி இருப்பதுடன், இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.