விளையாட்டு

இலங்கையை அழைக்கும் பாகிஸ்தான்

இலங்கை கிரிக்கட் அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு பாகிஸ்தானுக்கு வருமாறு அந்த நாட்டின் கிரிக்கட் சபை கோரியுள்ளது.
ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஸிப் போட்டிகளுக்கு சமாந்தரமாக இந்த போட்டிகளை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சிங்கபூரில் நடந்த ஆசிய கிரிக்கட்பேரவைக் கூட்டத்தில் வைத்து இதற்கான அழைப்பு சிறிலங்கா கிரிக்கட்டுக்கு விடுக்கப்பட்டது.
சிறிலங்கா கிரிக்கட்டின் அதிகாரிகளை பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைமைகளை ஆராயுமாறும் அழைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறிலங்கா கிரிக்கட் இதுதொடர்பில் இன்னும் பதில் எதனையும் வழங்கவில்லை என்று தெரிகிறது.