இலங்கை

இலங்கையில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த இங்கிலாந்தின் கோடீஸ்வரர் – ஓய்வுக்காக வந்தபோது நடந்த பரிதாபம் !

இங்கிலாந்தின் முன்னணி கோடீஸ்வரர் – ஸ்கொட்லாந்தின் பெரும் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான Anders Holch Povlsen தனது நான்கு பிள்ளைகளில் மூன்று பேரை இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கை வந்த அவரின் குடும்பம் குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி அவரும் மனைவியும் ஒரு பிள்ளையும் உயிர்தப்பியதை உறுதிப்படுத்திய அவரின் பேச்சாளர் யார் யார் இறந்தவர்கள் என்ற பெயர்கள் விபரங்களை வெளியிடவில்லை.

இலங்கையில் அவர்கள் எடுத்த படங்கள் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இங்கிலாந்தை சேர்ந்த எட்டுப் பேர் இலங்கையில் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர் .பிரிட்டனை சேர்ந்த ஒரு சட்டத்தரணி அவரின் 11 வயது மகன் ஆகியோரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.