இலங்கை

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 270ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 270ஆக அதிகரித்துள்ளது.

 

மரணங்கள் பதிவான பகுதிகள்

  • கொழும்பு 3 பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயது பெண்
  • கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயது ஆண்
  • முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது ஆண்
  • களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது ஆண்
  • தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயது ஆண்
  • இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது ஆண்