விளையாட்டு

இலங்கையின் முக்கிய போட்டி இன்று

 

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான சிறிய வாய்ப்புடன் இன்று இலங்கை அணி தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது.

தென்னாப்பிரிக்கா ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கான தகுதியை இழந்துவிட்டது.

இலங்கைக்கு சிறிய வாய்ப்பு உள்ளது.

இந்த போட்டியிலும் எதிர்வரும் 2 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிப்பெறும் பட்சத்தில், அரையிறுதிக்கு தகுதிப்பெற முடியும்.

எனவே இலங்கைக்கு இன்றைய போட்டி மிக முக்கியமானதாக உள்ளது.

ஏற்கனவே அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் அரையிறுதிக்கான பாதையை தெளிவுப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், நான்காவதாக தகுதிபெறவுள்ள அணிக்காக இங்கிலாந்து, பங்களாதேஸ், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையில் போட்டி நிலவுகிறது.