Breaking News

இலங்கையர் ஒருவர் உட்பட 78 பேருக்கு குவைத்தில் கொரோனா தொற்று !

 

கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனா வைரஸால் (COVID-19) பாதிக்கப்பட்டுள்ளதாக குவைத் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது இதன்படி மொத்த தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மொத்தம் 743 ஆக உயர்ந்துள்ளது.

குவைத் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல்-சனத் கூறுகையில் ,23 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் 17 பேர் சாதாரண நிலையிலும் ஆறு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

“தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 673 பேர். 911 பேர் தனிமைப்படுத்தலை முடித்துள்ளனர். இதுவரை ஒரு மரணம் பதிவாகியுள்ளது.” என்றார் அவர்.

பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, டாக்டர் அல்-சனத் கூறுகையில், 69 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள். இதில் 56 இந்திய பிரஜைகள், ஒரு பாகிஸ்தானியர், மூன்று பங்களாதேஷியர்கள், மூன்று எகிப்தியர்கள் உள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் இரண்டு ஈரானியர்கள், ஒரு சிரிய பிரஜை , ஒரு இலங்கையர் , ஒரு பிலிப்பைன்ஸ் வாசி மற்றும் ஒரு கேமரூனிய பிரஜை உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.

78 new coronavirus cases in Kuwait – Total 743