விளையாட்டு

இலங்கைக்கு 361 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

 

சிம்பாப்வே அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 361 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 175 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் நேற்றைய தினம் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்நது.

இந்நிலையில் இன்றைய தினம் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே , ஏழு விக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி 406 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தனது முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 293 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதற்கமைய 113 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்ற நிலையில் சிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தpருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டியின் இறுதிநாளான இன்றைய தினம் இலங்கை அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது.