இலங்கை

இலங்கைக்கு பதிலடி கொடுத்தது சிங்கப்பூர்

 

இலங்கை மத்திய வங்கி பிணைமோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டு சிங்கப்பூரில் தங்கியுள்ளதாக சொல்லப்படும் அர்ஜுன் மஹேந்திரனை திருப்பி அனுப்ப ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்ற ஜனாதிபதி மைத்திரியின் குற்றச்சாட்டை சிங்கப்பூர் நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் , இது தொடர்பில் கடந்த ஜனவரியில் இருந்து விசாரணைகள் இலங்கையுடன் இணைந்து நடத்தப்படுவதாகவும் ஆனால் இது சம்பந்தமான உரிய ஆவணங்கள் எதுவும் இலங்கையிடம் இருந்து இதுவரை கிடைக்கவில்லையென தெரிவித்துள்ளார்.

“ உரிய ஆவணங்கள் ஆதாரங்கள் கிடைத்தால் எங்கள் நாட்டின் சட்டப்படி நடவடிக்கைகளை எடுப்போம். அப்படியில்லாமல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் அர்த்தமில்லை..”

என்றும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்..