Breaking News

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே !

 

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக சிரேஷ்ட இராஜதந்திரி கோபால் பாக்லே விரைவில் பதவியேற்கவுள்ளாரென தெரியவருகிறது.

புதுடில்லி பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக தற்போது பணியாற்றும் கோபால் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய வெளிநாட்டுச் சேவையில் 1992 ஆம் ஆண்டு இணைந்த கோபால் முக்கிய பொறுப்புகளை வகித்த ஒருவராவார்.

தற்போது இலங்கையில் கடமையாற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவராக செல்லவுள்ளார்