Breaking News

இலக்கியவாதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி காலமானார்

 

தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக தன்னை சர்வதேசம் வரை அடையாளப்படுத்திக் கொண்ட எழுத்தாளர் கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி நேற்றிரவு சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் காலமானார்.

தடாகம் என்ற கலை, இலக்கிய வட்டத்தினூடாகத் தொடர்ச்சியாக இவர் மேற்கொண்ட இலக்கியப்பணி முக்கியமானதாகும்.

மருதூரில் பிரகாசித்த பெண் ஆளுமைகளில் ஒருவரான இவர், பெண்களின் கல்வி, உரிமைகள், சமூகப் பிரச்சினைகளை தனது எழுத்தால் வெளிக்கொணர்ந்து, தீர்வுகளை பெற்றுக் கொடுக்க அயராது பாடுபட்ட ஒருவர்.

நீண்ட காலமாகத் தமிழ் இலக்கியத் துறையில் ஈடுபட்டுவந்தவர் கலைமகள்.

இலங்கையில் மட்டுமன்ற, மலேசியா, தமிழகத்திலும் பல இலக்கியவாதிகளுடன் தொடர்புகளைப் பேணி வந்தவர். தடாகம் என்ற கலை, இலக்கிய வட்டத்தினூடாகத் தொடர்ச்சியாக இலக்கியத் துறையில் ஈடுபட்டுவந்தார் ஹிதாயா.