இலங்கை

இறக்குமதியாகும் பால்மாவின் தரம் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

 

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்டது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான இடைக்கால அறிக்கை இன்று (26) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த அறிக்கை வர்த்தக மற்றும் வணிக அலுவல்கள் பதில் அமைச்சரான புத்திக பத்திரனவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.