விளையாட்டு

‘இருபதுக்கு-20 போட்டியில் ஆபத்து அதிகம்’ – ரொமேஸ் களுவிதாரன “இருபதுக்கு-20 போட்டியில் மாத்திரம், கவனம் செலுத்தினால்  ஆபத்து அதிகம், ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக  இருபதுக்கு-20 போட்டி உங்களை உருவாக்காது.” இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரம் ரொமேஸ் களுவிதாரன தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஓய்வுக்குப் பிறகு 11 வருடங்கள் பயிற்சியாளராக இருந்தேன். இலங்கை ஏ அணிக்கு 6 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்தேன். அதன் பின்னர், நான் எந்த சொந்த தொழிலான ஹோட்டல் துறையில் கவனம் செலுத்தினேன். இப்போதைக்கு கிரிக்கெட்டுடன் எனக்குத் தொடர்பில்லை.”

“எனக்கு இன்றைய கிரிக்கெட்டில் பல துடுப்பாட்ட வீரர்களை பிடித்திருந்தாலும் விராட் கோஹ்லியின் கடின உழைப்பு என்னைக் கவர்கிறது, எப்போதும் ஓட்டங்களை எடுத்த வண்ணம் இருக்கிறார். எந்தச் சூழ்நிலையிலும் எந்த ஒரு கிரிக்கெட்டிலும் விராட் ஆட்டத்தைப் பார்க்க பிடித்திருக்கிறது.’

“19 வயது கிரிக்கெட் வீரர் வளரும் பருவத்தில் இருபதுக்கு-20 கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தக்கூடாது என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் இந்த வயதில் ஒருவர் கிரிக்கெட் இன்னிங்ஸை எப்படி கட்டமைப்பது,  தொழில் ரீதியாக தன்னை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.”

“இருபதுக்கு-20 போட்டியில் மாத்திரம், கவனம் செலுத்தினால்  ஆபத்து அதிகம், ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக  இருபதுக்கு-20 போட்டி உங்களை உருவாக்காது.”

எந்த ஒரு வீரரும் “இருபதுக்கு-20 போட்டியில் ஆரம்பிப்பதை நான் பரிந்துரை செய்யமாட்டேன்” என களுவிதாரன தெரிவித்துள்ளார்.