இலங்கை

இராணுவ விசேட படையணி தலைமையக கட்டிடத்தை ஜனாதிபதி திறந்துவைப்பு !

 

இலங்கை இராணுவத்தின் விசேட படையணி தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தலைமையக கட்டிடத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தினார்.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படை தளபதிகள், விசேட படையணி தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேர்ணல் சந்திமால் பீரிஸ் உள்ளிட்ட இராணுவ பிரதானிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.