உலகம்

இராணுவ படைகளை வலுப்படுத்த வடகொரியா அதிபர் உத்தரவு

வடகொரியாவின் இராணுவ படைகள் மற்றும் அணுசக்தி பலத்தை மேலும் வலுப்படுத்த அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க சில நாட்களே உள்ள நிலையில் அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பியோங்யாங் பகுதியில் ராணுவ உயரதிகாரிகளுடன் நடைபெற்ற மாநாட்டில் பேசிய கிம் ஜாங் உன், படைகள் எப்போதும் போர் நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.