இலங்கை

இராணுவத் தளபதியின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர் ரிஷார்ட் – யாரையும் விடுவிக்கக் கோரவில்லையென்கிறார் !

 

கைது செய்யப்பட்ட எவரையும் விடுதலை செய்யுமாறு இராணுவத்தளபதியிடம் கோரிக்கை எதனையும் விடுக்கவில்லையென அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க ,தெஹிவளையில் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்க அமைச்சர் ரிசார்ட் மூன்று தடவைகள் பேசியிருந்ததாக தெரிவித்திருந்தார். அது தொடர்பில் இன்று மறுப்பை வெளியிட்டுள்ள அமைச்சர் ரிசார்ட் மேலும் கூறியிருப்பதாவது ,

தெஹிவளையில் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுதலை செய்ய நான் கோரிக்கை விடுக்கவில்லை. ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து அப்படி ஒருவர் இராணுவத்தின் தடுப்புக் காவலில் இருக்கிறாரா இல்லையா என்பதையே நான் கேட்டேன்.தேவையெனில் எனது தொலைபேசியை பரிசோதனை செய்து பாருங்கள். எல்லாம் ஒலிப்பதிவில் உள்ளன. இந்த சம்பவங்களின் பின்னர் எவரையும் விடுதலை செய்யுமாறு பொலிஸையோ இராணுவத்தையோ நான் கேட்கவில்லை.கைது செய்யப்பட்டவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை என்னிடம் மட்டுமல்ல ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் உற்வினர்கள் கேட்டபடிதான் உள்ளனர்.நீர்கொழும்பு பகுதியில் ஒரு இறுதிக்கிரியை நடந்தபோது பாதுகாப்பு தேவையென என்னிடம் கோரப்பட்டது.அது பற்றி ஒருதடவை அவருடன் பேசினேன்.மற்றும்படி விடுவிக்க நான் எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை.

என்றும் குறிப்பிட்டுள்ளார் ரிசார்ட்