இலங்கை

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனை ஊடாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.