Breaking News

இராஜாங்கனையில் இராணுவ அதிகாரி குடும்பத்திற்கே கொரோனா – 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு பயிற்சி வழங்கவென திசாவெவ இராணுவ முகாமில் இருந்து சென்ற இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதனையடுத்து கொரோனா அச்சம் காரணமாக இராஜாங்கனையில் 70 சிறுவர்கள் உட்பட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் மகள்மார் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக இன்று பிற்பகல் தெரியவந்ததையடுத்து 11 வயதான மூத்த மகள் சென்றுவந்த கல்வி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.