Breaking News

இரண்டு ஆட்சேபனைகளை நிராகரித்தார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் !

 

ஜனாதிபதித் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு தொடர்பில் தெரிவிக்கப்பட்ட இரண்டு ஆட்சேபனைகளை நிராகரித்தது தேர்தல் ஆணைக்குழு.

ஆணைக்குழு தனக்குள்ள அதிகாரங்களை கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு அவரின் மனு தொடர்பில் சந்தேகங்கள் பரவலாக வெளியிடப்பட்டாலும் போட்டியிடுவோர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தபோது கோட்டாவின் பெயரும் அதில் இருந்தது குறிப்பிடத்தக்கது.