Breaking News

இரண்டு அமைச்சர்கள் – மூன்று எம் பிக்கள் பசிலுடன் இரகசியப் பேச்சு !

அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவை வெளியிட்டு அவர்கள் இந்த பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்னர் கோட்டாவுடன் இணைவது குறித்து பேசப்பட்டாலும் அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களை உடனடியாக இணைத்துக் கொள்வதில் பொதுஜன பெரமுன தரப்பில் தயக்கம் காட்டப்படுவதாக தெரிகிறது.அப்படி இணைவோருக்கு தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குவதில் உள்ள சிக்கல் நிலைமையே இதற்கான காரணம் என அறியமுடிந்தது.

தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் புதிய பிரதமரை தெரிவு செய்வதாக சஜித் பிரேமதாச அறிவித்த நிலையில் ரணில் ஆதரவு அமைச்சர்மார் மற்றும் எம் பிக்களே இவ்வாறு பசிலுடன் மறைமுக பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.