விளையாட்டு

இரண்டாவது போட்டி இன்று வெற்றிபெறுமா இலங்கை?

 

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றியீட்டிய நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

கண்டி – பல்லேகலையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் தொடரை கைப்பற்றும் நோக்குடன் களமிறங்குகின்ற அதேவேளை, தொடரை சமப்படுத்தும் முனைப்புடன் இலங்கை களமிறங்குகின்றது.

இன்று இரவு 7 மணிக்கு பல்லேகெலே மைதானத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் பங்கேற்கும் இலங்கை குழாம் வீரர்கள் நேற்று முற்பகல் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

இலங்கை அணியில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மேற்கிந்தியத் தீவுகள் அணியிலும் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், இருபதுக்கு-20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை பெற்றுள்ளது.