உலகம்

இரண்டாவது நாளாகவும ஈரானிய அரசுக்கு எதிராக போராட்டம்

உக்ரைன் விமானம் தாக்குதல் நடத்தியே வீழ்த்தப்பட்டதாக, ஈரான் அறிவித்ததை அடுத்து, ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக இன்று இராண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பாகங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

குறித்த தாக்குதல், தவறுதலாக நிகழ்ந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்ததோடு, மன்னிப்பும் கோரினர், எனினும் பலியான உயிர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ‘மன்னிப்பு மட்டும் போதுமா?’ என ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நேற்றைய தினம் பதுகாப்புத் தரப்பினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன.

தெஹ்ரானில் வெடித்தப் போராட்டத்தில் பித்தானிய தூதுவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது நாட்டில் இடம்பெற்ற ‘மிக மோசமான தவறு’ என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் எதிர்க்கட்சியான ‘கிரீன்’ இயக்கத் தலைவர் மெஹ்தி கரவ்பி, ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனி பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.