விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 381 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 344 ஓட்டங்ளை பெற்றுக் கொண்டது.

பின்னர் 37 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இலங்கை அணி 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் லசித் எம்புல்தெனிய 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் டெமினிக் பெஸ் மற்றும் ஜெக் லீச் தலா 4 விக்கெட்களையும் அணித்தலைவர் ஜோ ரூட் 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 164 ஓட்டகளை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் டெமினிக் சிப்லி ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்களை வீழ்த்திருந்தார்.

இதன்படி, இங்கிலாந்து அணி 2க்கு  0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.