இலங்கை

இரட்டைக் கோபுர தாக்குதலுக்காக அமெரிக்க ஜனாதிபதி பதவி விலகினாரா – நான் ஏன் விலக வேண்டும் ? – கேட்கிறார் மைத்ரி !

2001 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி பதவி விலகினாரா என்று ஸ்கை நிவ்ஸ் தொலைக்காட்சி செய்தியாளரிடம் கேள்வியெழுப்பினார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அந்த தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில்
அவர் கூறியிருப்பதாவது ,
2001 ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் பதவி விலகவில்லை.மாறாக அவர் அமெரிக்காவின் பாதுகாப்பை பலப்படுத்தினார்.அன்று அவர் செய்ததை நான் இன்று செய்கிறேன். நாட்டின் பாதுகாப்பை நான் பலப்படுத்துகிறேன். நாட்டு மக்கள் யாரும் என்னை விலகக் கோரவில்லை.
இலங்கை தாக்குதல்களுக்கு வெளிநாட்டு சக்தி ஒன்றின் கை இருக்கிறது. எங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு நான் ஐ எஸ் இயக்கத்தை கேட்க விரும்புகிறேன்..”
என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி !