விளையாட்டு

இரசிகர்களை ஏமாற்றிய செரீனா வில்லியம்ஸ் – இத்தாலி தொடரில் இருந்து இடைவிலகல்

இத்தாலி பகிரங்க டென்னீஸ் தொடரில் வில்லியம்ஸ் சகோதரிகளுக்கு இடையிலான இரண்டாம் சுற்றுப் போட்டி எதிர்பார்ப்பை மேலோங்கச் செய்திருந்தது.
எனினும் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக இடைவிலகுவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
37 வயதான செரீனா வில்லியம்ஸ், 23 தடவைகள் க்ராண்ட்ஸ்லேம் பட்டம் வென்றுள்ளார்.
அண்மைய நாட்களாக முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டுள்ள தாம், இந்த தொடரில் இருந்து இடைவிலகி, ஃப்ரென்சு பகிரங்க தொடரில் முழுமையாக அவதானம் செலுத்த எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கரொலின் வொஸ்னியாக்கியும் இத்தாலி பகிரங்க டென்னீஸ் தொடரில் இருந்து இடைவிலகியமை குறிப்பிடத்தக்கது.