விளையாட்டு

இயன் மோர்கன் காயமுற்றார்

இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் பயிற்சியின் போது விரலில் காயம் ஏற்படுத்திக் கொண்டார்.
இதனால் நாளை இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியாவுடனான பயிற்சி போட்டியில் அவரால் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் வீரர்கள் இன்று பிடியெடுப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் காயத்துக்குள்ளானார்.
எவ்வாறாயினும் மே 30ம் திகதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலக கிண்ண ஆரம்ப போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.