உலகம்

இம்ரான் கானை சந்தித்த மோடி

 

 

இந்திய பிரதமர் நரேந்திரமோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து மகிழ்ச்சி பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிகிஸ்தானில் நடைபெறும் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இரண்டு பேரும் அங்கு சென்றுள்ளனர்.

இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் அன்று அவர்கள் இருவரும் சந்தித்து, நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் பதட்ட நிலைமை ஏற்பட்டிருந்தது.

அதன் பின்னர் இவ்வாறான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எனினும் இதுகுறித்து இன்னும் இரண்டு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.