விளையாட்டு

இன்று ஆரம்பமாகும் உலகக்கிண்ண கிரிக்கட்

இங்கிலாந்தில் இன்றையதினம் 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் ஆரம்பமாகின்றது.
10 அணிகள் பங்குகொள்ளும் உலகக் கிண்ணத் தொடரானது, இன்று முதல் ஜீலை மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து. மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இதில் மோதுகின்றன.
தொடரின் முதலாவது போட்டி இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவுள்ளது.
இதுவரையில் நடைபெற்று முடிந்துள்ள 11 உலகக்கிண்ண தொடர்களில், 5 முறை அவுஸ்திரேலியா கிண்ணத்தை வென்றுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இரண்டு தடவைகள் கிண்ணத்தை வென்றுள்ளன.
இலங்கையும் பாகிஸ்தானும் ஒவ்வொரு தடவை உலகக்கிண்ணத்தை வென்றுள்ளன.
கிரிக்கட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து இதுவரையில் உலகக்கிண்ண தொடரை கைப்பற்றியதில்லை.
இந்தமுறை அதிக வாய்ப்புள்ள அணியாக இங்கிலாந்து பார்க்கப்படுகிறது.