இலங்கை

இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் – மஹிந்த தரப்புக்கும் ஆதரவில்லை – மைத்ரி தடாலடி !

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடந்து முடிந்த பின்னர் சில அமைச்சர்களுடன் தனிப்பட்ட ரீதியில் மனம் விட்டு பேசினார் மைத்ரி . அப்போதே இப்படி கூறியுள்ளார் அவர்.

“ இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்.அதேசமயம் மஹிந்த தரப்புக்கும் ஆதரவளிக்க மாட்டேன்.ஐக்கிய தேசிய முன்னணி புதிய வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் – கிரமமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்தால் அதற்கு ஆதரவளிப்பது பற்றி பரிசீலிப்பேன். இல்லாவிட்டால் மத்தியஸ்தம் வகிப்பேன்” – என்றும் குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி