Breaking News

இந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் நடக்காது !

 

அமைச்சரவை கூட்டம் வழமைபோல் இன்று நடைபெறவில்லை.

ஆனால் இந்த வாரத்திற்குள் அமைச்சரவையை கூட்ட ,ஜனாதிபதியிடம் சில அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் அதனை மைத்ரி நிராகரித்துவிட்டார்.

தாக்குதல் சம்பவங்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு ரத்துச் செய்யப்படும் வரை அமைச்சரவையை கூட்டப்போவதில்லையென்று ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசேட செய்தியொன்றை விரைவில் தரவுள்ளோம் .