உலகம்

இந்தோனேசிய ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள் – ஆறு பேர் உயிரிழப்பு

இந்தோனேசிய ஜனாதிபதிக்கு எதிராக தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜொகோ விடோடோ இந்தோனேசியாவின் ஜனாதிபதியாக் தெரிவு செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் வன்முறைகளாக மாறியுள்ளன.
எனினும் மரணித்தவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து சரியான காரணத்தை பொலிசார் வழங்கவில்லை.
ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிசார் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்ற போதும், அதனை அவர்கள் மறுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசார் கண்ணீர் புகைப்பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
தலைநகர் மாத்திம் இன்றி ஏனைய நகரங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில இடங்களில் சமூக வலைத்தளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.