இலங்கை

இந்திய 73 வது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்..

 

இந்தியாவின் 73வது   சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை இடம்பெற்றது .இந்திய துணைத் தூதுவர் க.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தூதரக அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.